Tuesday 3 July, 2007

ஐ.டி யில் பணி புரிகிறவர்களுக்கு யூனியன் தேவை யா?

ஐ।டி யில் பணி புரிகிறவர்களுக்கு யூனியன் தேவையா?

இப்படி ஒரு கேள்வி ஐ. டி நிறுவண நிர்வாகிகளிடம் இருந்து குறிப்பாக இன்போசிஸ் நிர்வாகிகளிடம் இருந்து வந்த வன்னம் உள்ளது, தொழிற்சங்கம் என்பது பல தியாகங்களை செய்து பெறப்பட்ட உரிமை, ஒருவரோ அல்லது அதிகமானாவரோ இந்த உரிமை குறிப்பிட்ட ஒரு தொழிலுக்கு பொருந்தும் அல்லது பொருந்தாது என்று கூறுவதற்கில்லை.அப்படி இருக்க இவர்கள் ஐ.டி தொழிலிள் யூனியன் என்றதும் ஏன் பதறு கிறார்கள்?காரணம் இல்லாமலில்லை,இந்தியாவில் முகாமிட்டுள்ள பல்வேறு ஐ.டி கம்பேணிகள் எவவளவு நாள் நிலைத்திருக்கும் என்பது கேள்விக்குறியே..
கம்பெணியின் நிலை தன்மையே கேள்விக்குறி எனும் போது தொழிலாளர் நிலை...
கம்பெணி மூட்டை கட்டும் போது தொழிலாளர்கள் வாழ்க்கையை பற்றி கேள்வி யெழுப்பி விட்டால் ....
அதுவும், யூனியன் என்ற பேரில் கூட்டமாக சேர்ந்து கேள்வி யெழுப்பி விட்டால்.....இப்படி பல் கேள்விகளை அவர்களுக்குள் எழுப்பி பார்த்து தான் யூனியனா வேண்டவே வேண்டாம் என்று பதறு கின்றனர்,யூனியனாக கட்டமைய விட்டாமல் சித்து வேளையெல்லாம் செய்கிறார்கள்.
கை நிறைய சம்பளம், போக்குவரத்துக்கு வசதி. சோர்வை கலைத்து உற்சாகம் கூட்ட காபி,டீ,மென்பாணம் (இன்னும் சில இடத்தில் பீர்) அத்தோடு நில்லாமல் வாரம் ஒரு முறையோ மாதம் ஒரு முறை யோ உல்லாச சுற்றுலா என "இவை யெல்லாம் எத்தனை நாளைக்கு " என்று மனதில் கேள்வி யெழும் வாய்ப்பே இல்லாமல் பார்த்துக் கொள்ள முயல்கிறார்கள்.
ஆயுத பூஜைக்கு முதலாளியா பார்த்து கவரில் போட்டு தரும் இணாமுக்கும்,உரிமையுடன் பேசி பெரும் போன்ஸ் பணத்துக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
இனாம் என்ற நினைவுடனே ஐ.டி நிர்வாகம் அளிப்பவற்றை ஊழியர்கள் பெற வேண்டும்,அது அவர்களின் உரிமை யென்றபுரிதல்லெல்லாம் வந்து விட கூடாது.யூனியன் அவர்களின் உரிமைகளை புரிய வைத்துவிடும் எனவே தான் எதிர்க்கிறார்கள்.
யூனியன் அவசியம் ஊழியருக்கு புரிய வேண்டும்.. நல்ல யூனியன் தலைமையை அவர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

No comments: