Tuesday 16 October, 2007

கற்றது தமிழ்

தமிழ் திரையில் மீண்டும் ஒரு புது முயற்சிபுது முக இயக்குனர் ராம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.(தேசத்தின் உண்மையான வளர்ச்சியை விரும்பாதவர்கள் தங்களுக்கு துணையாக அழைத்து வரும் பெயரை வைத்திரு ந்தாலும் ஒரு சமமற்ற வளர்ச்சியை (வீக்கத்தை)தன் காலடிப்பட்ட நாட்டில் எல்லாம் ஏற்படுத்தி வரும் உலக மயமாக்கலை சினிமாவிற்கென்றுள்ள தன்மைகளொடு சாடியுள்ள படைப்பு இது.தமிழ் ரசிகர்களெல்லாம் போன் போட்டு தங்கள் விருப்பதை தெரிவித்த மாதிரி "ரசிகர்கள் விரும்புவதை தான் நாங்கள் செய்கிறோம் என்று பேசிகொண்டு திரியும் சூப்ப்ர் ஸ்டார் கள் மத்தியில் இமேஜ் பறறி யோசிக்காமல் வெலுத்து வாங்கியுள்ளார் ஜீவா (இன்னொரு கமல்).
"இ ந்த பிரட்சனைக்கெல்லாம் தீர்வு என்னானு எனக்கு தெரியல ,தெரி ந்திரு ந்தா நான் இப்படி மாறி இருக்க மாட்டேன்" என்ற வசனம் இ நத பிரட்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் நீண்ட காலமாக பேசிக் கோண்டிருக்கும் முற்போக்கு வாதி களின் குரல் இன்னும் பலமாக ஒலிக்க வேண்டும் என்பதை சுட்டி காட்டுகிறது.பிரட்சனைகளுக்கு ஆட்பட்டு தீர்வு தெரியாது செய்வது இனனதென்று தெரியாமல் பைத்திய காரர்களாய் நம் கண்முன் திரியும் எத்தனையோ பேரின் ஒருவன் தான் பிரபாகர்(அந்த பிரபாகரும் அப்படிதானொ)அவர் சந்திக்கும் பிரட்சனைகளும் அதற்கு அவர் அளிக்கும் தீர்புமே கதை.
தமிழ் திரையுலகு எததனையோ பைத்தியகாரர் படங்களை தந்துளளது.ஆனால் இந்த பைதியகாரர் " இ ந்தியா வின் சுத ந்திர தினத்தன்று கூட அமெரிக்க காரர்களுக்கு வேலை செய்து கொன்டு இருக்கும் எப்படியும் பில்கேட்ஸ் அளவுக்கு உயர் ந்திட வேண்டும் எனற நினைப்பில் திரியும் படி த்த பைத்த்யங்களை காட்டிலும், நம் நிலை யேன் இப்படி உள்ளது என்பது பற்றியெல்லாம் யோசிககாமல் 150 ரூபாய் டி சர்ட்,200 ரூபாய் ஜீன்ஸ் வாங்கி போட்டுக்கொண்டு தங்களை விஜய் சூரியா மாதிரி நினைத்து திரியும் நம்ம இளைஞர்களை காட்டிலும் மேல் . இ ந்த இரு தரப்பினரும் கற்றது தமிழ் ல இரு ந்து கற்று கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான், உலக மயமாக்கலை எதிர்க்கும் படையில் அணித்திரள வேண்டும் இலலையேல் நம்மில் பலர் பைத்தியமாய் திரிய வேண்டிய கட்டம் வரும்.

Friday 12 October, 2007

பல் வேறு வேலை காரணமாக பதிவுகள் வெளியிட இயலவில்லை. மீண்டும் உங்கள் ஆதரவுடன் பயணத்தை தொடர்கிறது... உங்கள் அறிவியல் பார்வை