Monday 11 August, 2008

நியாய‌மான‌ கோப‌ம்

நியாய‌மான‌ கோப‌ம்
குரு‌ச‌ய்யாப‌ட்டி யை விட்டு வெளியே வ‌ந்த‌ பின்பும் ச‌க்திக்கு கோப‌‌ம் தீர்ந்த‌ பாடில்லை,அவ‌னுட‌ன் வ‌ந்த‌ ப்ரபோச‌ர் எஸ்.ஜி.எ, ச‌க‌‌மாண‌வ‌ர்க‌ள் ,ஆர்த்தி,குரு,க‌லா என‌ எல்லோரும் எதை ப‌ற்றியோ பேசிக் கொன்டு வ‌ருகையில் ச‌க்தியின் எண்ண‌ ஓட்ட‌மோ குருச‌ய்யாப‌ட்டியையும் அ ந்த‌ இளைஞ‌ன் க‌திரேச‌னையும் அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ளையும் தான் சுற்றிக் கொண்டு இருந்த‌து." பெரிய‌ ப‌டிப்பு ப‌டிச்சுட்டாணாம், ப‌த்தாவ‌து ப‌டிச்ச‌துக்கே பாரிஸ்ட‌ர் ப‌ட்ட‌ம் வாங்கின‌ மாதிரி துள்ளாரான்.. முட்டாள்.." ம‌ன‌துக்குள் முனு முனுத்தாலும் அவ‌னையும் அறியாம‌ல் க‌டைசி வார்த்தை கொஞ்சம் ச‌த்த‌மாக‌வே வெளி ப‌ட்ட‌து."யாரு ச‌க்தி முட்டாள்" அவ‌ன் கோப‌‌திற்கான் கார‌ண‌ம் புரிந்தாளும் புரியாதது போல‌ கேட்டாள் ஆர்த்தி,"ம்ம் அந்த‌ க‌திரேச‌ன் தான்.. என்ன‌ ஏதுன்னு ஒரு எழ‌வும் புரியாள‌னாலும்.. ...அவ‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்ய‌தான் வ‌ந்திருக்கோமுன்னு தெரியாம‌. பெரிசா...கோப‌ ப‌டுறானுங்க‌" ச‌க்தி முடிப‌த்த‌ற்குள் "ஆர‌ம்பிச்சிட்டான்யா.. ஆர‌ம்பிச்சிட்டான்யா.." என்று அவ‌னின் கோப‌‌த்தை த‌னிக்க‌ முய‌ற்சித்தான் குரு,"ச‌க்தி அதை விட‌ மாட்டியா, குரு சும்மா இருடா," என‌ ஆர்த்தி அத‌ட்ட‌ ப்ரபோசரும் க‌லாவும் அடுத்து செல்ல‌ வேண்டிய‌ கிராம‌த் தை ப‌ற்றியும், இங்கிருந்து அத‌ன் தூர‌ம், ப‌ய‌ண‌ நேர‌ம் ப‌ற்றி பேசிக் கொண்டே ந‌ட‌ந்தன‌ர்.
ஆல‌ ம‌ர‌த்து பிள‌வு.. குருச‌ய்யாப‌ட்டியில் இருந்து 2 கிலோ மீட்ட‌ர்..இது ப‌ஸ் ஏற‌ வேண்டிய‌ இட‌ம்.. அவ‌ர்க‌ளின் ல‌க்கேஜ் க‌ளை இற‌‌க்கி வைத்து விட்டு உட்கார‌ ஏதுவான‌ இட‌ங்க‌ளில் உட்கார்ந்த‌ன‌ர்.யாரு க‌ண‌க்கெடுக்க‌ வ‌ந்த‌வ‌க‌ளா.. வ‌ந்த‌ வேல‌ ந‌ல்ல‌ ப‌டியா முடிஞ்சுதுக‌லா.." இந்த‌ ஊருக்குள்‌ள நுழையும் போது முத‌ளில் அறிமுக‌மான ஆடு மேய்க்கும் பிச்ச‌ய்யா தாத்தாவின் குர‌ல் இது,"க‌ண‌க்கெடுத்து கொண்டு போயீ என்ன‌ செய்வீங்க‌ சாரு..ஏதாவ‌து இந்த‌ ஏழை பாழைக‌ளுக்கு பிரியோச‌ன‌ம் இருக்குமா..தாத்தா கேள்விக‌ளை அடுக்கி கொண்டே போக‌ ச‌க்தி குறுக்கிட்டு ப‌தில் சொல்ல‌ தொட‌ங்கிணான்,"இங்க‌ பாருங்க‌ தாத்தா.. நாங்க‌ அர‌சாங்க‌ ஆளுங்க‌ இல்ல‌.. ம‌க்க‌ள் நிலைமைய‌ ப‌ற்றி ஆராய்ச்சி செய்து, இந்த‌ ம‌க்க‌ளுக்கு என்ன‌ என்ன‌ வ்ச‌திக‌ள் தேவைங்கிற‌‌த க‌ண்டு பிடிச்சி அது அதுக்கு பொறுப்பான‌ வ‌ங்க‌ கிட்ட‌ தெரிவிக்க‌ வ‌ந்து இருக்கோம்.. நாங்க‌ளாம் ஸ்டூட‌ன்ட்..ம்மாண‌வ‌ர்க‌ள்.." முடித்தான் ." எது எப்ப‌டியோ த‌ம்பி.. ஊருக்கு விடிவு கால‌ம் வ‌ந்தா போதும்..ஒரு ஆஸ்ப‌த்திரி இருக்கா.. த‌ண்ணி கொழா இருக்கா.. " புல‌ம்பிய‌ ப‌டியே தாத்தா ந‌க‌ர்ந்தார். " ந‌ல்ல‌ தாத்‌தா இல்ல‌ ச‌க்தி.. " இவ‌ருக்கு இருக்குற‌ தெளிவு கூட‌ அந்த‌ யூத்துங்க‌ளுக்கு இல்ல‌.. என்ன‌வா எகிறானுங்க‌..இவ‌னுங்க‌ ப‌டுற‌ க‌ஸ்ட‌த்துக்கெல்லாம்‌ என்ன‌மோ நாம் தான் கார‌ண‌ம் போல‌.." கோவ‌த்தை வார்த்தைக‌ளாய் கொட்டினான் ச‌க்தி. " விடு ந‌ண்பா..தெளிவு இல்லாத‌வ‌ன்னு நீயே சொல்லிட்டே , அவ‌ன் செய்தத்தை போயீ பெருசா பேசிக்கிட்டு..தோளில் கை போட்ட‌ ப‌டி கொஞ்ச‌ தூர‌ம் ந‌ட‌த்தி சென்றான் குரு. க‌லாவும் ஆர்த்தியும் பேராசிரிய‌ரை பார்த்த‌ ப‌டி "யேய் ச‌க்தி கைல‌ இருந்த‌ பேப்ப‌ரை பிடுங்கி க‌திரேச‌ன் வீசிய‌து தாம்பா ச‌க்திக்கு தாங்க‌ முடிய‌ல‌" ஆர்தி சொல்ல‌,"ஆம‌ம்பா... ஆனால் என்ன‌ க‌ண‌க்குன்னு கேட்ட‌தும் இவ‌ன் ஒழுங்கா ப‌தில் சொல்லி இருக்க‌னும்.. க‌திரெச‌னுக்கு ஒன்னும் தெரியாதுனு முடிவு ப‌ன்ன‌ இவ‌ன் யாரு.. அதான் அவ‌ன் டென்ச‌ன் அயிட்டான்" என்றாள் க‌லாரானி." இவ‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்ய‌தான் வீட்ட‌ விட்டு குடும்ப‌த்த‌ விட்டு இவ்வ‌ளவு தூர‌ம் வ‌ந்திருக்கோம், அதை புறிஞ்சுக்காம‌,கேள்வி மேல‌ கேள்வி கேட்டு டிச‌ப்பாயின்ட் ப‌ன்னிட்டான் என்ப‌துதான் ச‌க்தியோட‌ வாத‌ம்..ஆர்த்தி சொல்லி முடிக்கும் பொது ச‌க்தியும் குருவும் அருகிள் வ‌ர‌வே "யேய் ச‌க்தி வ‌ற்ரான் டாபிக்க குளோஸ் ப‌ன்னு.." என்றாள் க‌லா.இருவ‌ரும் பேராசிரிய‌ரை நோக்கி வ‌ரும் போதே‌ " சார் ஆர்.டி.சி ப‌ஸ் ஈவ்னிங் 5 ஓ க்ளாக் தானாம்.. அதுக்கு முன்னாடி ரென்டு மூனு த‌னியார் ப‌ஸ் வ‌ருமாம் அந்த‌ ஊருக்குள்ள‌ போகுமா.. இல்லை பை பாஸ்ல‌ எற‌க்கி விட்டுடுவானா‌னு கேட்டு ஏற‌ சொல்லுறாங்க‌." என்ற‌ த‌க‌வளை தெரிவித்தான் குரு. " ஆமாம் வ‌ரும் போது ‌ ஆல‌ ம‌ர‌த்து பிள‌வுன்னு சொல்லி வ‌த்த‌ல‌ குண்டு பை பாஸுல‌ ஆல‌ ம‌ர‌த்து கிட்ட‌ ஏமாத்தி இற‌‌க்கி விட்டானெ அந்த‌ மினி ப‌ஸ் பேரு என்ன‌..வினாய‌க‌மோ... ராம‌னோ..யெப்பா அஞ்சி கிலோ மீட‌ட்ர் ந‌ட‌க்க‌ வ‌ச்சிட்டானெ பாவி.. ' என்றாள் ஆர்த்தி‌, " போகும் போதாவ‌து வெவ‌ர‌மா கேட்டு ஏற‌னும்" இது க‌லா,இதுவ‌ரை க‌ல‌க‌ கார‌ ஐன்ஸ்டின் புத்த‌க‌த்தில் மூழ்கி இருந்த‌ பேராசிரிய‌ர் த‌லையை உய‌ர்த்தி " அந்த‌ வேலைய‌ ச‌க்தி கிட்டெ ஒப்ப‌டைப்போம்..என்ன‌ ச‌க்தி ச‌ரியா" என்றார்.ச‌க்தி ப‌தில் ஏதும் சொல்ல‌ வில்‌லை குருச‌ய்யாப‌ட்டியில் அவ‌னுக்கும் க‌திரெச‌னுக்கும் ந‌ட‌ந்த‌ த‌ள்ளு முள்ளில் பேராசிரிய‌ர் ச‌க்தி ப‌க்க‌ம் இருந்த‌ நியாய‌த்தையேற்று கொள்‌ள‌ வில்லை என்ப‌த‌ற்காக‌வே இந்த‌ கோவ‌ம்,அவ‌ர் இவ‌ன் ப‌க்க‌ம் பேசி இருந்தால் ச‌க்தி ம‌ண்ணிப்பு கேட்க‌ வேன்டும் என்ற‌ நிலை வ‌ந்திருக்காது என்ப‌து ச‌க்தியின் எண்ண‌‌ம், ஆனாலும் பேராசிரிய‌ர் சொன்ன‌து போலவே அந்த‌ பொறுப்பை செய்து முடிப்பான் என்ப‌து எல்லோரின் ந‌ம்பிக்கை. ஒரு மினி ப‌ஸ் புழுதியை கிள‌ப்பிய‌ ப‌டி இர‌ண்டு மூன்று பேருடன் வ‌ந்த‌து, உட‌னே ச‌க்தி க‌ன்ட‌க்டரிட‌ம் சென்று விசாரித்தான்,அந்த‌ ப்ஸ் செல்லாதாம்,அடுத்த‌டுத்து இர‌ண்டு வ‌ண்டிக‌ள் வந்த‌து‌ அதுவும் செல்லாதாம். வ‌த்த‌ல‌ குண்டு என்று பொட்டு ஒரு ப‌ஸ் ச‌ரியாக‌ ஐந்து காலி இருக்கை க‌ளுட‌ன் வ‌ந்து ‌திரும்பி நின்ற‌து, அப்போது ச‌க்தி குழுவின‌ரை த‌விர‌ ஆறு ஏழு பேரு ப்ஸ்ஸுக்காக‌ காத்திருந்த‌ன‌ர், ச‌க்தி க‌ன்ட‌க்ட‌ரிட‌ம் சென்று விச‌ரிப்ப‌த‌ற்குள் ச‌க‌ ப‌ய‌னி ஒருவ‌ர் இவ‌ர்க‌ள் செல்ல‌ வேண்டிய‌ இட‌த்துக்கு போகும் என்று ப‌தில‌ளித்த‌ன‌ர் இருந்த‌ போதும் க‌ன்ட‌க்ட‌ரிட‌ம் கேட்டு ஆம் என்று ப‌தில் பெற்ற‌ பின்பே இவ‌ர்க‌ள் ஐவ‌ரும் ப‌ஸ்ஸில் ஏறின‌ர், அனைவ‌ருக்கும் சீட் கிடைக‌வே உட்கார்ந்து கொண்ட‌ன‌ர், ஆனால் ச‌க்தி இன்னொரு முறை போக‌வேண்டிய‌ இட‌த்தை சொல்லி க‌ன்ப‌ர்ம் செய்து கொன்டே சீட்டுக்கு சென்றான், ஆனாலும் க‌ன்ட‌க்ட‌ரின் ப‌திலில் திருப்தி அடைந்தார் போல‌ தெரிய‌வில்லை, கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் வ‌ரும் போது கூட‌ ஆல‌ ம‌ர‌த்து பிள‌வு என்று அழுத்‌த‌ம் திருத்த‌மாக‌ கேட்டு தான் ஏறினார்க‌ள்.அந்த‌ க‌ன்ட‌க்ட‌ராவ‌து போகும் என்று வாய் திற‌‌ந்து சொன்னார் ஆனால் இவ‌ரோ த‌லையை ம‌ட்டுமே ஆட்டிய‌தில் ச‌ந்தேக‌ம் வ‌லுக்க‌வே செய்த‌து, மீண்டும் ஒரு முறை கேட்டு விடுவ‌து என‌ முடிவு செய்து க‌ன்ட‌க்ட‌ரை நெருங்கி " அம்பாத்துரைக்குள்ள‌ போகுமா இல்லை மெயின் ரோட்டுல‌ விட்டுடுவீங்க‌ளா‌ " என்றான் இப்போதும் க‌ன்ட‌க்டர் த‌லையை அசைக்க‌வே கோவ‌ம் த‌லைக்கேறி "ஹ‌லோ போகுமா போகா‌தா வாய‌ திற‌ந்து சொல்லுங்க‌..." ப‌ஸ்ஸே அதிர‌ ச‌த்த‌ம் போட்டான், உட‌னே க‌ன்ட‌க்டர் " த‌லைய‌ அசைத்தா..ஆமாம்னு புரிய‌தா..ஆமாம் சார் அம்ப‌த்துரைக்கு தான் போறோம் வாங்க‌ சார்னு சொன்னாதான் புரியுமோ..." க‌ன்ட‌க்டர் ப‌திலுக்கு க‌த்தினார்,ச‌ந்தேக‌ம் தெளிந்த‌ வ‌னாய் "சாரி..மொத‌வே தெளிவா சொல்லி இருக்க‌லாமுல்ல‌..வ‌ரும் போது இபப்‌டிதான் இட‌த்‌த மாற்றி இற‌க்கி விட்டுடாங்க‌..அதான்.சாரி..""அத‌னால‌ என்ன‌ சார்..எதுக்கு சார் சாரி.. " இது க‌ன்ட‌க்டர், ,ச‌க்தி சீட்டுக்கு‌ வந்து உட்கார்ந்தான்,ப‌ஸ் புற‌ப்ப‌ட்ட‌து முன் சீட்டிலிருந்து திரும்பிய‌ பேராசிரிய‌ரிட‌ம் " சார் ஏதும் புக் கொடுங்க‌.. ப‌டிக்க‌.."ச‌க்தி கேட்டான்,ச‌க்தியின் முக‌த்தை பார்த்து புண்ண‌கைத்த‌ப‌டி "அதென்னா ஒரே ஒரு முறை ஏமாந்த‌ ந‌ம‌க்கு மீண்டும் யாரும் ஏமாத்திடுவ‌ங்க‌ளோ என்ற‌ ப‌ய‌த்துல‌ வ‌ர‌ கோப‌‌ம் நி‌யாய‌மான‌து..கால‌ம் கால‌மா ஏமாந்து கிட்டே இருக்குற‌வ‌ன், இப்ப‌த்தான் கேள்வி கேட்க‌ ஆர‌ம்பிச்சுருக‌க‌வ‌ன்.. கோப‌‌ப‌ட்டா ந‌ம்மால‌ பொறுத்துக்க‌ முடிய‌ல‌..ஏன் ச‌க்தி?.." ப‌தில் தெரியாம‌ல் த‌ய‌ங்கிய‌வ‌னிட‌ம் வென்ம‌ணி முத‌ல் தென்ப‌ரை வ‌ரை புத்த‌க‌த்தை நீட்டினார்.