Wednesday 27 October, 2010

இயற்கை விவசாயத்திலும்,

நகர வீட்டுத்தோட்டம் அமைப்பதிலும் புதிய உலகை படைப்பதிலும்

கியூபாக்கு நிகர் உலகில் வேறு நாடு இல்லை




மேலைநாட்டு விவசாய, பொருளாதார, சமூக அறிஞர்கள் ஆர்வமுடன் நோக்கும் நகரம்
ஹவானா. சிறந்தநகர விவசாயத்திற்குபெயர் பெற்றது.

1991
ஆண்டு சோவியத் யூனியன் சிதறிய போது சோவியத் யூனியனிலிருந்து
இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல், இரசாயன உரம்
மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு காரணமாய் விவசாய
உற்பத்தியில் மிக மோசமான வீழ்ச்சியை கண்டது கியுபா. அவர்களின் முக்கிய
ஏற்றுமதியான சர்க்கரை (கரும்பு விவசாயம்) பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின்
கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டு
நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை காண துவங்கியது. அதனை தடுத்து
நிறுத்தும் முயற்சியில் இருக்கின்ற வளங்களைக் கொண்டு அங்கக வேளாண்மையில்
துவங்கி இன்று ஹவானா நகரம் தனக்கு தேவையான காய்கறிகளில் 80% நகர விவசாயம்
மூலம் உற்பத்தி செய்கிறது. தனியார் தோட்டம்(huertos privados), அரசாங்க
பொதுநிலத்தில் தனியார் (அல்) கூட்டுறவு தோட்டம்(huertos populares),
அரசாங்க தோட்டம்(organicponicos),என பிரித்து தங்களின் உழைப்பை தந்து
தன்னிறைவு பெற்றுள்ளனர். நாமும் இதற்கான சிறு முயற்சியை மேற்கொண்டால்
நாம் உயர்வதுடன் உலக சுற்றுச்சுழலுக்கும் நன்மை செய்தவர்களாகின்றோம்.