Saturday 30 June, 2007

இணைய பழக்க அடிமைத்தனம்

கோலி, பம்பரம், கிட்டிப்புள், காத்தாடி விடுதல், மறைந்து விளையாடுதல், என பல விளையாட்டுகளை நாம் சிறு வயதில் விளையாடியிருப்போம். கல்லாங்காய், பாண்டி விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், சதுரங்கம் கூட விளையாட்டுகள் கூட சிறு வயதினர் பலர் விளையாடும் விளையாட்டுகளே. பள்ளிகளில் கிரிக்கெட், கால்பந்து, கபடி, கோகோ போன்ற விளையாட்டுகளும் விளையாடியிருப்போம். இந்த விளையாட்டுகள் உடற்பயிற்சியாக அமைந்தது மட்டுமல்லாது மனமகிழ்ச்சியும் அளிப்பவையாக அமைந்தவை. படிப்பை விட விளையாட்டில் கவனம் அதிகமானால் பெற்றோர்களின் கண்டிப்பும் சில சமயம் தண்டனையும் கிடைத்த அனுபவங்கள் நம்மில் பலருக்கு இருக்கலாம். ஆனால் கல்வியும் விளையாட்டும் அவற்றுக்குரிய கவனம் செலுத்தப்பட்டு அவற்றில் மின்னும் குழந்தைகளை பெற்றோர் கடிந்து கொள்வதில்லை.
ஆனால் அறிவியலும் தொழில்நுட்பமும் அதி நவீன முன்னேற்றங்களை நம் விட்டில் பயன்படுத்தும் பொருட்களில் நம்மை உணரச் செய்துகொண்டிருக்கும் இந்த நவநாகரீக காலத்தில் இந்த விளையாட்டுகளை விட பெற்றோர்களுக்கு வேறு ஒரு விளையாட்டு வினையாக எழுந்து குழந்தைகளை ஆட்டிவைத்துள்ளது கண்டு செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.
கணிணிமயமான இந்த காலக்கட்டத்தில் சிறுவர்களும், பள்ளி வயது பதின் பருவத்தினரும் மனமகிழ்ச்சிக்கும், விளையாட்டுக்கும் தேர்ந்தெடுக்கம் களம் இணையமாகிவிட்டது. ஆம் இணைய விளையாட்டுக்களே இன்றைக்கு சிறு வயதினரின் விருப்ப விளையாட்டுகளாக மாறியுள்ளன. நாம் முன்னர் குறிப்பிட்ட விளையாட்டுகள் கணிணினியிலேயே மென்பொருட்களின் சூட்சுமத்தால் விளையாடக் கிடைக்கும் போது, எதற்கு வெளியே சென்று விளையாடவேண்டும். மட்டுமல்ல சில இணைய விளையாட்டுகள் தொடர் விளையாட்டுகளாக, நீண்ட காலம் விளையாடும் வகையில் அமைந்திருப்பதோடு, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் தங்கள் முன் உள்ள கணிணியின் உதவியோடு விளையாட முடிகிறது. எனவே எதற்கு தெருவில் சென்று மாஞ்சா போட்டு காற்றாடி விட வேண்டும்
1 2
nandri- http://tamil.cri.cn/1/2007/03/19/62@50726.htm

Wednesday 27 June, 2007

அமெரிக்க அணு அரக்கனே சென்னைக்குள் நுழையாதே......
அமெரிக்க அணு சக்தி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் ஜுலை 1 அன்று சென்னை துறைமுகத்திற்கு வரவுள்ளது. ஜுலை 5 வரை சென்னையில் இக்கப்பல் முகாமிட்டிருக்கும்.
உலகின் மிகப் பெரிய போர் கப்பலில் ஒன்றான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்
இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பின் பேரிலேயே சென்னைக்கு வரவிருக்கிறது.
இக்கப்பலின் வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
#அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற ராட்சத கப்பல் உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான அணு சக்தி போர்க் கப்பல்களில் ஒன்று.
#1975ம் ஆண்டு செயல்படத் தொடங்கிய இந்தக் கப்பல் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட கப்பல் ஆகும்.
#இந்தக் கப்பலில் 75 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும்.
#மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இந்தக் கப்பல் பயணிக்கும். கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஈராக் போரின்போது இந்தக் கப்பலிலிருந்துதான் அமெரிக்க விமானங்கள் ஈராக்கைத் தாக்கி வந்தன.இந்தக் கப்பலில் 2 அணு உலைகள் உள்ளன. அணு சக்தியின் மூலம் இந்தக் கப்பல் இயங்குகிறது. இந்தக் கப்பல் சென்னைக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதுகுறித்து துறைமுக ஊழியர்கள் மற்றும் நீர் போக்குவரத்துப் பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நரேந்திர ராவ் கூறுகையில்இ இந்தக் கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் பெருமளவில் கதிர் வீச்சு ஏற்படும். அதனால் சென்னை நகரம் முழுமையாக அழிந்து போய் விடும். அது மட்டுமல்லாமல் பக்கத்தில் உள்ள தென் மாநிலங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்.இந்த ஆபத்தை விவரித்து அமெரிக்க அணு சக்தி கப்பலை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோரி மத்திய அமைச்சரவைச் செயலாளர்இ கப்பல் துறை செயலாளர்இ சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஆகியோருக்கு நரேந்திர ராவ் கடிதம் எழுதியுள்ளார்.பயங்கர ஆயுதங்கள் அணு உலைகளுடன் வரும் இந்த அமெரிக்கக் கப்பலால் சென்னை துறைமுகத்தில் பெரும் பீதி நிலவுகிறது.ஈராக்கில் பேரழிவு மிக்க ஆயுதங்கள் உள்ளது என்ற பெயரில் ஈராக் நாட்டை அழித்து துவம்சம் செய்த அமெரிக்கா அந்நாட்டின் அதிபர் சதாமையும் துக்கிலிட்டது. மொத்தத்தில் அந்நாட்டின் இறையாண்மையையே அழித்து நொறுக்கியது.தற்போது ஈரான் மீது கண் வைத்திருக்கும் அமெரிக்கா. அந்நாட்டில் அணுசக்தி உற்பத்திக்கு தடை விதிக்க கோருவதோடு முற்றிலுமாக கைவிட வேண்டும் என நிர்ப்பந்தித்து வருகிறது. அடுத்த ஒரு போர்ச் அமெரிக்கா தயார் செய்து வருகிறது.அதே போல் வடகொரியா. சிரியா. கியூபா என பல்வேறு நாடுகளை ரவுடிகள் நாடுகளாக பட்டியலிட்டுள்ளதோடு. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் இறையாண்மைக்குள் மூக்கை நுழைத்து வருகிறது.இந்திய ஆட்சியாளர்களும் நாளுக்கு நாள் அமெரிக்க உலக ரவுடிக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்து வருகின்றனர். அமெரிக்காவை நம்பிய எந்த நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. உலகம் முழுவதும் அணு சக்தி உற்பத்திக்கு தடை கோரும் அமெரிக்க கப்பல் அதுவும் அணு உலைகளைக் கொண்டு இயங்கும் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் போர்க்கப்பல் என்பதோடு மட்டுமல்ல அது தனக்குள்ள பேரழிவு மிக்க அணு ஆபத்தையும் கொண்டுள்ளது. இத்தகைய கப்பலில் ஏதாவது சிறு ஆபத்து நேர்ந்தால் கூட அது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும் - ஆந்திரா உட்பட புல் - பூண்டு இல்லாமல் அழியும் ஆபத்து உள்ளது. இத்தகைய அபாயகரமான கப்பலை சென்னைக்கு நுழைய அனுமதித்த மத்திய அரசின் செயல் கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும்.
யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்-யை இந்தியாவிற்கு நுழைய அனுமதித்த மத்திய அரசின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,.A.D.M.K கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லிட்டில் பாய். பேட் பாய் என்று ஹிரோஷிமா - நாகாசாகியை அழித்து மனித குலத்தையே நாசமாக்கிய அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் சென்னையை அழிக்க அனுமதிக்கலாமா? ஆர்த்தெழுவோம் அணு அரக்கனை விரட்டியடிக்க!ஈராக்கை அழித்த அரக்கனை சென்னையை அழிக்க விடலாமா? அகிம்சையை விதைத்த மண்ணில் அரக்கர்களை அனுமதிக்கலாமா? மனித குலத்தை மண்ணுலகிற்கு அனுப்பும் அமெரிக்க போர் வெறியை - நாடுபிடிக்கும் நாட்டாண்மையை நிர்மூலமாக்குவோம்!