Thursday 5 July, 2007

15வதுதேசிய குழந்தைகள் அறிவியல்




படம் 1 மாநிலஅளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு காட்சி
படம் 2மாவட்டஅளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு காட்சி
படம் 3தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டு காட்சி
குழந்தைகள் அறிவியல் மாநாடு
கடந்த 14 ஆண்டுகளாக தேசிய அறிவியல்தொழில் நுட்பக் கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்திவருகின்றது,
குழந்தைகளிடையே அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வளர்க்க இந்த மாநாடு நடத்த படுகினற்து,
பள்ளி செல்லும் அல்லது செல்லாத குழந்தைகள் குறைந்தது மூவர்,அதிக பட்சம் ஐவர் அடங்கிய குழுவாக ஆய்வுகள் மேற்கொள்வார்கள்,ஆய்விற்கான தலைப்பு அளிக்கப் படும்,
மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் மையமான ஓர் இடத்தில் குழு குழந்தைகள் மூலம் வாசிக்கப் பட்டு,அளிக்கப் பட்ட தலைப் போடு பொருந்தக்கூடிய, புதிய தகவலை/விவரத்தை அளிக்க கூடிய, அறிவியல்பூர்வ தீர்வை முன் வைக்க கூடிய ஆய்வுகள் வல்லமை பெற்ற நடுவர்களை கொண்டு தேர்வு செய்யப் பட்டு அம்மாணவர் குழு மாநில மாநாட்டிற்கு அனுப்பபடும் அங்கு தேர்வு செய்யப்படும் ஆய்வு அறிக்கைகளை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட் டில் கவுரவிக்கப் படும்।

மாவட்டளவில் பங்கேற்கும் மாணவர்கள் அனைருவமே "குழந்தை விஞ்ஞானிகள் " என்று சான்றிதழ் அளிக்கப் பெறுவர்.11 முதல் 13 வயது வரை ஒரு குழுவாகவும், 14 வயது முதல் 17 வரை ஒரு குழுவாகவும் செயல்பட அனுமதிக்கபடுவர்.
சென்ற வருடம் மாநில மாநாடு ஈரோட்டிலும், தேசிய மாநாடு சிக்கிமிலும் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தலைமையில் நடைப்பெற்றது.
சென்னை மாவட்ட மாநாடு சென்னை பல்கலை கழக வளாகத்தில் துணை வேந்தரின் தொடக்கவுரையுடன் நடைப்பெற்றது.
ஒவ்வொரு வருடமும் மாணவர் குழுக்களுக்கு உறுதுணையாக செயல்பட கூடிய வழி காட்டி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் மற்றும் வல்லுனரின் உதவியுடன் பயிற்சிகள் நடத்த படும்.
இந்த வருடம் மேற்க்கொள்ள வேண்டிய ஆய்வின் தலைப்பு-"உயிரிகளின் பல் வகைமைஎதிகாலத்திற்கு உயிர்களை பாதுகாத்தல்"....
14ஆண்டுகளில் கலந்து கொண்ட பல் மாணவர்கள் இன்று அறிவியல் துறையில் சிறந்து விளங்கு கின்றனர்....
உங்கள் பிள்ளைகள் மற்றும் தெரி ந்த பிளளைகளை பங்கேற்க்க செயலாமே...
விவரங்கள் அறிய..
உதயன் (சென்னை மாவட்ட செயலர்)
9444453588
அ।செம்மல் ( வட சென்னை மாவட்ட ஒருங்கினைப்பாளர்)
9841764170
சுதாகர் (மண்டல ஒருங்கினைப்பாளர் }
9840989822
கனேஷ் (தே।கு।அ।மா மாவட்ட ஒருங்கினைப்பாளர்}
9940424642
அலி பாட்ஷ (தே।கு।அ।மா மாவட்ட அமைப்பாளர்)
9840851718









No comments: