Tuesday 3 July, 2007

கருத்து கணிப்பா? திணிப்பா?

கருத்து கணிப்பு என்ப்து அறிவியல் பூர்வமாக கூறப்படும் பொய் என்று யாரொ சொல்ல கேட்டது தினகரன் வெளியிட்ட சர்வே முடிவு களை பார்க்கும் போது நினைவிற்க்கு வந்தது,அந்த பத்திரிகை முதலாளிகளுக்கு உள்ள விருப்பத்தை கருத்து கனிப்பு என்ற பேரில் மக்கள் மூலையில் தினிக்க முயன்றுள்ளது தெள்ள தெளிவாக புரியும்.ஆரம்ப காலத்தில், அரசின் செயல் பாடு குறித்து மக்களின் கருத்தறிய இத்தகைய சர்வேக்கள் உதவியது. தற்போதும் கூட பல்வேறு வனிக நிறுவணங்கள் தங்களின் சந்தை நிலவரத்தை அறிய இத்தகைய சரிவேக்களை நிகழ்த்து கின்றன,அதன் மூலம் தங்களின் தொழில் முன்னேற்றத்தைதிட்ட மிடுகின்றன.மேலும் பல்வேறு தன்னர்வ அமைப்புகளும்,மாணவர் குழுக்களும் சர்வேக்கள் நடத்தி சமூக பிரச்சனைகளை வெளிகொணற உதவு கின்றனர்.ஆனால் இழவு வீட்டில் கூட அரசியல் லாபம் தேடும் கேடு கெட்ட அரசியல் வாதிகள் இந்த சர்வே முறையை கூட தங்களின் சுய தம்பட்டத்திற்க்கு பயன் படுத்தி கொள்கின்றனர்.தினகரன் தனது சர்வேவை ஒரு பிரபல மான சர்வே நிருவணத்தின் மூலம் நடத்தி யுள்ளது, இந்நிறுவணம் போன்றே பல நிறுவணங்கள் சர்வதேச அளவில் பேரும் தரமும் கொண்டிருந்தாலும் உள்ளூர் அளவில் அப்படி இல்லையெண்றே தோண்றுகிறது, ஏனென்றால் அவை மேற்கோள்ளும் சர்வெக்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர் விருப்பத்தை , எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமான முடிவை கொண்ட தாக இருக்க நிர்பந்திக்க படுகிறார்கள், மேலும் இந்த நிறுவணங்கள்கள ஆய்விற்கு அனுப்பும் பணியாளர்கள் அக் கம்பெனியின் நிரந்தர பணியாளராக இருப்பத்தில்லை,ஊதியத்தை பொறுத்தவரை எந்த ஒரு நிர்ணயிப்பும் இல்லை,அந்த ஊதியமும் குறிப்பிட்ட கால கெடுவில் வழங்க படுவதில்லை,எனவே களப்பணியளர்களில் பலர் ஒரே நேரத்தில் பல நிறுவணத்தில் பணி புரியும் நிலையும் உள்ளது,இந் நிலையில் இப்பணியாளரிடம் இருந்து எப்படி தரமான விவரங்களை எதிர் பார்க்க முடியும்.இந்த லட்சணத்தில் மேற்க்கோள்ளப்பட்ட சர்வெ முடிவின் காரண மாக எத்தணை கொண்டாடம், ஆர்பாட்டம் ஒரு பக்கம் ,கோவாவேசம்,படுகொலைகள் மறு பக்கம்.
புகைந்து கொண்டுறிந்த தொழில் தகறாரை ,பங்காளி சண்டையை பட்டவர்த்தன மாக்கியது ஒரு சர்வே முடிவு. ....இந்த ஒரு விசயத்தை தவிர தினகரன் சர்வே வினால் யாதொண்றும் பயணில்லை நண்பர்களே...
சிந்திப்போம் நண்பர்களே...
சுய விளம்பரம்,பண பலம்,பிரசார ஊடகம்,சாதி,சந்தர்ப்ப வாத அரசியல் இன்றி, மக்கள் நலனுக்காக் உழைக்கும் அரசியல் சக்திகள் இருக்கின்றார்கள்,
அவர்கள் யாரெண்று கண்டறியும் திசை வழியில். .
சிந்திப்போம் நண்பர்களே...

1 comment:

Anonymous said...

அருமை நண்பா,ஒரு உபயோகமான வரவு உங்கள் வரவு,உங்கள் பணி தொடரட்டும்
வலைதள வழி போக்கன்