Saturday 30 June, 2007

இணைய பழக்க அடிமைத்தனம்

கோலி, பம்பரம், கிட்டிப்புள், காத்தாடி விடுதல், மறைந்து விளையாடுதல், என பல விளையாட்டுகளை நாம் சிறு வயதில் விளையாடியிருப்போம். கல்லாங்காய், பாண்டி விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், சதுரங்கம் கூட விளையாட்டுகள் கூட சிறு வயதினர் பலர் விளையாடும் விளையாட்டுகளே. பள்ளிகளில் கிரிக்கெட், கால்பந்து, கபடி, கோகோ போன்ற விளையாட்டுகளும் விளையாடியிருப்போம். இந்த விளையாட்டுகள் உடற்பயிற்சியாக அமைந்தது மட்டுமல்லாது மனமகிழ்ச்சியும் அளிப்பவையாக அமைந்தவை. படிப்பை விட விளையாட்டில் கவனம் அதிகமானால் பெற்றோர்களின் கண்டிப்பும் சில சமயம் தண்டனையும் கிடைத்த அனுபவங்கள் நம்மில் பலருக்கு இருக்கலாம். ஆனால் கல்வியும் விளையாட்டும் அவற்றுக்குரிய கவனம் செலுத்தப்பட்டு அவற்றில் மின்னும் குழந்தைகளை பெற்றோர் கடிந்து கொள்வதில்லை.
ஆனால் அறிவியலும் தொழில்நுட்பமும் அதி நவீன முன்னேற்றங்களை நம் விட்டில் பயன்படுத்தும் பொருட்களில் நம்மை உணரச் செய்துகொண்டிருக்கும் இந்த நவநாகரீக காலத்தில் இந்த விளையாட்டுகளை விட பெற்றோர்களுக்கு வேறு ஒரு விளையாட்டு வினையாக எழுந்து குழந்தைகளை ஆட்டிவைத்துள்ளது கண்டு செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.
கணிணிமயமான இந்த காலக்கட்டத்தில் சிறுவர்களும், பள்ளி வயது பதின் பருவத்தினரும் மனமகிழ்ச்சிக்கும், விளையாட்டுக்கும் தேர்ந்தெடுக்கம் களம் இணையமாகிவிட்டது. ஆம் இணைய விளையாட்டுக்களே இன்றைக்கு சிறு வயதினரின் விருப்ப விளையாட்டுகளாக மாறியுள்ளன. நாம் முன்னர் குறிப்பிட்ட விளையாட்டுகள் கணிணினியிலேயே மென்பொருட்களின் சூட்சுமத்தால் விளையாடக் கிடைக்கும் போது, எதற்கு வெளியே சென்று விளையாடவேண்டும். மட்டுமல்ல சில இணைய விளையாட்டுகள் தொடர் விளையாட்டுகளாக, நீண்ட காலம் விளையாடும் வகையில் அமைந்திருப்பதோடு, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் தங்கள் முன் உள்ள கணிணியின் உதவியோடு விளையாட முடிகிறது. எனவே எதற்கு தெருவில் சென்று மாஞ்சா போட்டு காற்றாடி விட வேண்டும்
1 2
nandri- http://tamil.cri.cn/1/2007/03/19/62@50726.htm

No comments: